வடிவேலு
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களின் பொக்கிஷம் என்றால் தான் வடிவேலு தான். ஆரம்பம் என்னவோ கொஞ்சம் தடுமாறினாலும் இடையில் அவர் காட்டிய மாஸ், அவருக்கு கிடைத்த வரவேற்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
நடுவில் நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ்கள் மூலம் மக்களின் மனதில் நிலைத்து இருந்தார்.
இப்போது வடிவேலு, சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படம் நடித்துள்ளார். இந்த படமும் நேற்று (ஏப்ரல் 24) வெளியாகிவிட்டது, படக்குழுவும் படத்திற்கு கிடைத்த வரவேற்பு பார்த்து சந்தோஷத்தில் உள்ளனர்.
காரணம்
இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு அவர்களிடம் விவேக்கிற்கு இறுதி மரியாதை செலுத்த வராதது ஏன் என கேட்டுள்ளனர். அதறகு அவர், விவேக்கின் இறப்பு எனக்கு தாங்க முடியாத வலி.
அவரது இறப்பிற்கு நான் போகவில்லை என நிறைய பேர் கேட்டார்கள், ஆனால் வீட்டுக்கு எல்லாம் சென்று, விவேக்கின் மனைவி, குழந்தைகள் அனைவரிடமும் துக்கம் விசாரித்தேன்.
விவேக் இறப்பான் என நான் நினைக்கவில்லை, அவன் இறந்த காலகட்டத்தில் நான் ரொம்ப மோசமாகத்தான் இருந்தேன். எங்க வீட்டுலயே ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு பயந்துட்டு இருந்தாங்க, அதனால்தான் போகவில்லை என கூறியுள்ளார்.