வடிவேலுவின் கேங்கர்ஸ்
வைகை புயல் வடிவேலுவை எப்போது திரையில் பார்த்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் சில குறிப்பிட்ட நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் வடிவேலு இணையும் போது அந்த நகைச்சுவை வேற லெவலில் இருக்கும்.
அப்படிப்பட்ட வெற்றி கூட்டணி தான், சுந்தர் சி – வடிவேலு. வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம் என பல படங்களில் நகைச்சுவையில் இந்த கூட்டணி பட்டையை கிளப்பி இருக்கிறது.
குட் பேட் அக்லி முதல் பாடலால் அதிரும் இணையம் ஆனால்.. அஜித் எங்கு சென்றுள்ளார் பாருங்க
அந்த வரிசையில் தற்போது வடிவேலு – சுந்தர் சி காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கேங்கர்ஸ். சுந்தர் சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஸ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
படம் பார்த்தவர்களின் விமர்சனம்
இந்த நிலையில், கேங்கர்ஸ் திரைப்படத்தை திரை வட்டாரத்தில் உள்ள முக்கிய நபர்கள் சிலர் பார்த்துள்ளனர். படத்தை பார்த்த அவர்கள், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், வடிவேலு பல கெட்டப்களில் மிரட்டியிருக்கிறார் என்றும் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் மூலம் நகைச்சுவையில் வடிவேலு கம்பேக் கொடுக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 24ம் தேதி திரையரங்கில் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.