முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ பகிரங்கப்படுத்தும் தகவல்கள்

ஆயுதங்கள் வழங்குவதாக ரஜீவ் காந்தி அழைப்பு விடுத்த புலேந்திரன் மற்றும் குமரப்பா போன்ற 17 தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகள் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நிறுவுனர் வை.கோபாலசாமி (Vaiko)
தெரிவித்துள்ளார்.

தனது இலங்கை பயணம் குறித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயம் குறித்து கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி, தனது வீட்டிற்கு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனையும், பாலசிங்கத்தையும் அழைத்து பேசுகின்ற போது சில ஆயுதங்களை வழங்குவதாக கூறினார். 

அழைப்பு விடுப்பு 

இதற்கமைய, தமிழீழ விடுதலை புலிகளின் புலேந்திரன் மற்றும் குமரப்பா உள்ளிட்ட 17 தளபதிகள், இந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகத்தில் உள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்ல கடல்வழி புறப்பட்டார்கள். 

விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ பகிரங்கப்படுத்தும் தகவல்கள் | Vaiko Talked About Rajiv Gandhi Sri Lanka Tamils

இதன்போது, இலங்கை கடற்படையினர், அவர்களை சுற்றி வளைத்தார்கள். அப்போது தளபதிகள் விடுதலை புலிகளின் தலைவருக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தினார்கள். 

அதனை தொடர்ந்து, இந்திய அரசை தொடர்பு கொண்டு உங்களை நம்பித்தான் எமது தளபதிகள் புறப்பட்டார்கள். இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்ற அவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என கூறினார். 

ஆயுதம் பெறல்… 

இதில் ரஜீவ் காந்தி தலையிட முயன்ற போதும், சில துரோகிகளால் ஜெயவர்தனவை திருப்திபடுத்துவதற்கு அவர்கள் கைதாகட்டும் என கூறினார்கள். 

விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு ரஜீவ் காந்தியால் ஏற்பட்ட சிக்கல் : வைகோ பகிரங்கப்படுத்தும் தகவல்கள் | Vaiko Talked About Rajiv Gandhi Sri Lanka Tamils

அதன தொடர்ந்து, சிங்கள இராணுவம், கத்தி முனைகள் சொருகப்பட்ட துப்பாக்கிகளுடன் அங்கு சென்றதுடன் காவலுக்கு இருந்த இந்திய அதிகாரிகள் வெளியேற்றப்பட்டார்கள். 

இதன்போது, இலங்கை இராணுவத்தினர், கைதான தளபதிகளின் குரல்வளைகளில் கத்தியால் குத்தி அவர்களை தாக்க 12 தளபதிகள் அங்கேயே உயிரிழந்தார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.