வரலட்சுமி
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. ஆனால் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார்.
கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் துணிச்சல் மிக்க கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி நடிப்பில் 12 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட மதகதராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
சிவகார்த்திகேயனின் டான் போன்று டிராகன் படம் உள்ளதா?.. இயக்குநரின் அதிரடி பதில்
கடந்த ஆண்டு வரலட்சுமி அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பேன் என்று வரலட்சுமி கூறிய நிலையில், தற்போது இவர் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
எந்த நிகழ்ச்சியில்
அதாவது, ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற உள்ளார். சங்கீதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் வரலட்சுமி கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.