தமிழ், தெலுங்கு படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வரும் வரலக்ஷ்மி சரத்குமார் தற்போது ஹாலிவுட்டில் நுழைந்து இருக்கிறார்.
அவர் ஹாலிவுட் நடிகர் Jeremy Irons உடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார். “Rizana – A Caged Bird” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இலங்கையை சேர்ந்த இயக்குனர் சந்திரன் ரத்னம் இயக்குகிறார்.


கூலி படத்தை கைப்பற்றிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. பிரம்மாண்ட தொகைக்கு வியாபாரம்
உண்மை கதை
இலங்கையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாக்கப்படுகிறது.
ரிஸானா என்ற இலங்கை பெண் 2005ல் சவுதி அரேபியாவில் ஒரு குடும்பத்தின் பணிப்பெண்ணாக வேளைக்கு செல்கிறார். அவர் பார்த்துக்கொண்டு 4 மாத குழந்தை திடீரென மரணம் அடைகிறது, அந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்படும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
குழந்தையை கொன்ற குற்றத்திற்காக 2013ல் அவர் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த சமயத்தில் இது கடும் கண்டனங்களை சந்தித்தது. ரிஸானா குற்றம் செய்ததாக கூறப்படும் போது அவருக்கு 17 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது கதையை தான் Rizana – A Caged Bird என்ற பெயரில் படமாக்குகின்றனர். டைட்டில் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது. புகைப்படங்கள் இதோ.
View this post on Instagram





