லொஸ் ஏஞ்சல்ஸில் சாண்டா மொனிகா புளூவர்டில், ஒரு வாகனம் மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் மோதியதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்பு திணைக்களம் (LAFD) தெரிவித்துள்ளது.
அதில் ஐந்து பேர் தீவிரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பத்து பேர் பாரிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
விசாரணை
சம்பவ இடத்தில் எடுத்த படங்களில், ஒரு சாம்பல் நிறக் கார் நடைபாதையில் மோதிய நிலையில் காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களும், காரணங்களும் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

