உழவு இயந்திர வாகன பதிவு இலக்கத்துடன் கூடிய சொகுசு ஜீப் வண்டியொன்றை வைத்திருந்த மோசடி தொடர்பில் முன்னாள் அரசியல்வாதியொருவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பிரிவு பொலிஸாரின் நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செயப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் வாதியொருவரின் தந்தையான 60 வயது நபரொருவரே நேற்று(11.01.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
சொகுசு ஜீப்
அவரது பயன்பாட்டில் இருந்த சொகுசு ஜீப் 20 வருடங்களுக்கு முன்னதாக உழவு இயந்திர வாகன பதிவு இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை காலமும் வாகனத்துக்கான வருமான வரி செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவரின் சகோதரரும் போலியான வாகனப் பதிவுகள் கொண்ட வாகனங்களின் பதிவுப் புத்தகங்களை தம் வசம் வைத்திருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் வலானை மோசடித் தடுப்புப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.