முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்துடன் விவாதத்தில் ஈடுபட்ட போது தான் நாகரிகமாகவே நடந்து கொண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2010ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை நான் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான நூற்றுக்கணக்கான விவாதங்களில் கலந்துகொண்டுள்ளேன்.
ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து கூறும் உரிமை எனக்கு இருப்பதோடு அதனை கையாள்வதற்கான பக்குவமும் எனக்கு உள்ளது.
ஆனால், அவ்வாறு ஒரு கருத்தை கையாள்வதற்கான ஆளுமை இல்லாதவர்கள் கோபப்படுவதன் மூலம் ஒரு பொய்யை உண்மையாக்க முடியாது.
குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யார் நாகரிகமாக நடந்து கொண்டார்கள் யார் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,