வேட்டையன்
ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் இயக்குனர் TJ ஞானவேல் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்த நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
நேற்று திரையரங்கில் வெளிவந்து இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், அவை யாவும் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
விதவிதமான புதிய லுக்கில் அஜித்.. ஆளே மாறிப்போன திரிஷா.. வெளிவந்த புகைப்படம் இதோ
முதல் நாளே உலகளவில் வேட்டையன் படம் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மாபெரும் ஓப்பனிங் செய்துள்ள வேட்டையன் இலங்கையில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை வசூல்
அதன்படி, இலங்கையில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 61 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளே இலங்கையில் இப்படம் ரூ. 2 கோடியை கடந்துள்ள நிலையில், கண்டிப்பாக வரும் நாட்களிலும் வேட்டையன் படத்தின் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.