விடாமுயற்சி
யதார்த்தமான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி கடந்த 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
உலகளவில் இப்படம் நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, வாங்க பார்க்கலாம்.
முதல் நாளில் இருந்தே விடாமுயற்சி படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடுமையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் ஆதரவால் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது.
சூர்யாவின் அடுத்த பட கதாநாயகி யார் தெரியுமா? இயக்குநர் இவரா, அதிரடி அப்டேட்
வசூல் விவரம்
இந்த நிலையில், 11 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 90 கோடியை வசூல் செய்துள்ளது. விரைவில் கண்டிப்பாக ரூ. 100 கோடி வசூல் செய்து, பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.