விடாமுயற்சி
ரசிகர்களின் பெறாதவருடன் மாபெரும் வெற்றியை விடாமுயற்சி திரைப்படம் பெற்றுள்ளது. யதார்த்தமான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்தில், அஜித் மிகவும் சட்டிலான நடிப்பை வெளிப்டுத்தி இருந்தார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார்.
மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்றவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தனர். முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது விடாமுயற்சி.
சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா..
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இப்படம், தமிழ்நாட்டில் தற்போது வரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் 12 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ. 90.5 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலை தொடுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.