விடாமுயற்சி
நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. திரையரங்கில் வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித், முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் நடித்தார். இதுவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன் என மங்காத்தா கம்போ இணைய, படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு பெரிதானது.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து நடிகர் சதீஷ் போட்ட பதிவு.. என்ன இப்படி சொல்லிட்டாரு
கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகளவில் ரூ. 152 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்கில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஓடிடி ரிலீஸ்
காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக விடாமுயற்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற மார்ச் 3ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விடாமுயற்சி படம் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கில் எப்படி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டதோ, அதே போல் ஓடிடி தளத்திலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Muyarchi thiruvinai aakum. Vidaamuyarchi ulagai vellum 💪🔥
Watch Vidaamuyarchi on Netflix, out 3 March in Tamil, Hindi, Telugu, Kannada & Malayalam!#VidaamuyarchiOnNetflix pic.twitter.com/21OiHpF8AB— Netflix India South (@Netflix_INSouth) February 24, 2025