விடாமுயற்சி
துணிவு படத்திற்கு பின் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற 2025 பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்திலிருந்து சவடிகா எனும் பாடல் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
Youtubeல் இதுவரை 6 மில்லிங்களுக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது இந்த பாடல். அனிருத் இசையில் உருவான இப்படம் Youtube மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கூட வைரலாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.
விஜய்யை அவமானப்படுத்தினாரா இயக்குனர் பாலா.. உண்மை இதுதான்! அவரே கூறிவிட்டார்
ப்ரீ புக்கிங் வசூல்
இந்த நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 30 லட்சம் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கான மாஸ் ஒப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. இதனால் முதல் நாள் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.