பிரபல தொகுப்பாளராக சின்னத்திரையில் வலம் வந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவ்வப்போது விருது விழாக்கள், பட விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் அவர் பிட்னெஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் ஆன்லைன் மூலமாக அந்த பயிற்சியையும் கொடுத்து வருகிறார்.

AI மூலம் குரல் மாற்றி வீடியோ
இந்நிலையில் ரம்யா தனது வீடியோவை வைத்து அதில் AI மூலமாக வேறு குரலை பயன்படுத்தி சிலர் தவறாக பயன்படுத்தி இருப்பதாக அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார்.
இது மூன்றாவது முறை நடக்கிறது என குறிப்பிட்டு அந்த நபருக்கு ரம்யா இன்ஸ்டா எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
அதை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் கூறி இருக்கிறார்.


