விடுதலை 2
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். சமூகத்திற்கு தேவையான படைப்புகளை கொடுத்து வரும் இவர் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் படம் வெளிவந்த விடுதலை 2.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
திடீரென விலகிய விடாமுயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர் வெளியிட்ட கடிதம்
இறுதி வசூல்
சமீபத்தில் தான் இப்படத்தின் வெற்றியை தயாரிப்பாளர், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள். மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்ற இப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் விடுதலை 2 திரைப்படம் ரூ. 56 கோடி வசூல் செய்துள்ளது. மாபெரும் வெற்றியடைந்த விடுதலை முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது விடுதலை இரண்டாம் பாகம் Above ஆவெரேஜ் தான் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.