மனசெல்லாம்
சந்தோஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், த்ரிஷா, நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான ஒரு காதல் திரைப்படம் மனசெல்லாம். இப்படத்தினை தயாரிப்பாளர் விஸ்வநாதன் ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், முதலில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வரும் ஒரு நடிகை நடித்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?


தேவயானி மகளும் என் மகளும் ஒன்னா?.. வைரலாகும் பிக் பாஸ் வனிதாவின் பரபரப்பு பேச்சு
என்ன ஆனது?
ஆம், பிரபல நடிகை வித்யா பாலன் தான் முதலில் இந்த படத்தில் த்ரிஷா ரோலில் நடித்திருந்தார். ஆனால், இவருடைய நடிப்பு சரி இல்லை என்று கூறி பாதியில் அவரை படத்தில் இருந்து படக்குழு அனுப்பி விட்டனர்.
பின், தான் அந்த ரோலில் த்ரிஷா நடித்தார். இதனால், வித்யா பாலன் மிகவும் வருத்தப்பட்டு பின் தமிழ் சினிமா பக்கம் வர கூடாது என்று முடிவெடுத்துவிட்டாராம். அதன் பின் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் மட்டும் நடித்தது குறிப்பிடத்தக்கது.


