விஜய் ஆண்டனி
முதலில் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.
இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன்-2 படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். சின்னத்திரையில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
கடும் எதிர்ப்பால் ராஷ்மிகாவின் அந்த காட்சி படத்தில் இருந்து நீக்கம்.. திடீர் முடிவால் பரபரப்பு
நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த இவர் நடித்த முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார்.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் 25 – வது படம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தை அருண் பிரபு எழுதி இயக்குகிறார். தற்போது இந்த படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா🔥
இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா👺#VA25 @ArunPrabu_ @vijayantonyfilm pic.twitter.com/XCxjv95UVH— vijayantony (@vijayantony) January 29, 2025