காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, எல்லைகள் மூடல் என பல நடவடிக்கைகள் அரசு எடுத்து இருக்கிறது.
சிந்து நதியில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் வெளிப்படையாகவே போர் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பற்றி சினிமா துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் ஆண்டனி இது பற்றி பேசி இருக்கிறார்.
அமைதியை விரும்புகிறார்கள்..
விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..
“காஷ்மீரில் உரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.”
“அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என விஜய் அதானி கூறியுளளார்.