ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9 – ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட்
ஜெயிக்கப்போவது யார்?
இந்நிலையில், விஜய் படத்திற்கு போட்டியாக பிரபாஸின் ராஜா சாப் படம் அதே 9 – ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த இரண்டு படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.