சச்சின் படம்
நடிகர் விஜய் நடிப்பில் இதுவரை 68 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது, அவரது கடைசி படமான 69வது படம் ஜனநாயகன் அடுத்த வருடத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது.
இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பட ரிலீஸிற்கு இடையில் விஜய் நடிப்பில் ரசிகர்கள் கொண்டாடிய ஒரு சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ் ஆகப்போகிறது.
தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!!
விஜய் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சச்சின் படம் தான் ரீ-ரிலீஸ் ஆகிறது.
ப்ரீ புக்கிங்
சச்சின் இந்த படம் குறித்து ரசிகர்களுக்கு நாம் எந்த விஷயத்தையும் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளது சச்சின். இன்று ஏப்ரல் 18, படம் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இப்படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.