ஏஸ்
கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா மாபெரும் அளவில் வசூல் வேட்டையை பாக்ஸ் ஆபிஸில் நடத்தியது. அதன்பின் வெளிவந்த விடுதலை 2 படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால், இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான முதல் படமே படுதோல்வியை சந்தித்துள்ளது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்த திரைப்படம் ஏஸ்.


ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் தக் லைஃப்.. இதுவரை இத்தனை கோடியா
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் பப்லூ, அவினாஷ், யோகி பாபு, திவ்யா பிள்ளை என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு கடந்த மே 23ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த நிலையில், படுதோல்வியடைந்துள்ள ஏஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 8 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

