நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக ஒரே நேரத்தில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். கெஸ்ட் ரோல் என்றாலும் சரி, வில்லன் ரோல் என்றாலும் சரி எதுவாக இருந்தாலும் உடனே நடிக்க ஓகே கூறிவிடுவார். அப்படி தெலுங்கிலும் அவர் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்
ஆனால் இனிமேல் கெஸ்ட் ரோல், சின்ன சின்ன ரோல்கள் போன்றவற்றில் நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஹீரோவாக நடிக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
.
பூரி ஜெகன்நாத்
தெலுங்கில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் விஜய் சேதுபதி தற்போது கூட்டணி சேர்ந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படுகிறதாம்.
இயக்குனர் சொன்ன ஆக்ஷன் கதை பிடித்ததால் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உடனே ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
இயக்குனர் பூரி ஜகநாத் தெலுங்கில் ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்தவர். குறிப்பாக அவர் இயக்கிய போக்கிரி படம் தமிழில் விஜய் நடித்து ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி உடன் அவர் இணையும் படமாவது அவருக்கு திருப்பத்தை கொடுக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram