நடிகர் விஜய் சினிமாவை தாண்டி தற்போது அரசியலிலும் தீவிரமாக இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் அவர் 2026 தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதோடு சரி.. மக்களை சந்திக்க வரவில்லை என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. புயல் நிவாரணம் கொடுக்க கூட மக்களை அவர் ஆபிசுக்கு வர வைத்து கொடுத்தார். ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறாரா விஜய் என்று அப்போது கடுமையாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
மக்களை சந்திக்க போகும் விஜய்
இந்நிலையில் விஜய் கட்சியில் பொறுப்பில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் விஜய் அடுத்த மாதம் மக்களை சந்திக்க போகிறார் என தெரிவித்து இருக்கிறார்.
2025 ஜனவரி 27ம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போகிறார் என்கிற தகவலையும் அவர் கூறி இருக்கிறார்.