விஜய்யின் GOAT
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் greatest of all time. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் விஜய் அசத்தியிருந்தார். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் தெரியுமா
சில இடங்களில் நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கேமியோ ரோலில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் த்ரிஷா. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடனமாடிய மட்ட பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது.
மட்ட பாடல்
இந்த நிலையில், இந்த வீடியோ பாடல் Youtube-ல் வெளிவந்த 6 மாதங்களை கடந்துள்ள நிலையில், இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் – த்ரிஷா ஜோடி சேர்ந்தாலே அது ஹிட் தான் என மட்ட பாடலை குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள்.