விஜய் டிவி
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ரக்ஷன்.
இவர் ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது, இதனால் அடுத்தடுத்த சீசன்களையும் இவர்களே தொகுத்து வழங்கினர்.
தொகுப்பாளராக இருந்த ரக்ஷ்ன் இப்போது நடிகராகவும் கலக்கி வருகிறார்.
ஸ்ருதி அம்மா நீட்டிய செக், முத்து கொடுத்த செம பதிலடி.. சிறகடிக்க ஆசை புரொமோ
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றார்.
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
புதிய ஆபிஸ்
தனது சினிமா பயணத்தில் கடின உழைப்பின் மூலம் முன்னேற்றத்தை கண்டுவரும் ரக்ஷன் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார்.
அங்கு தனது மனைவி மற்றும் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.