சின்னத்திரையில் பிரபலம் ஆகி அதன்பிறகு படங்களில் என்ட்ரிகொடுத்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி கவின், KPY பாலா வரை சின்னத்திரையில் இருந்து வந்த ஹீரோக்கள் ஏராளம்.
அப்படி பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் வந்திருக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் இருந்து இன்னொரு ஹீரோ தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ராமர்
விஜய் டிவியின் காமெடி ஷோக்களில் தோன்றி அதிகம் பிரபலம் ஆன நடிகர் ராமர் தான் ஹீரோவாக தமிழ் சினிமாவில் நுழைந்து இருக்கிறார்.
அவர் ஹீரோவாக நடித்த சற்று நேரத்தில் தீர்ப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி தான் அதை ரிலீஸ் செய்து இருக்கிறார்.


