விஜய் டிவி
சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாகும் விஜய் டிவி. ஆனால், தற்போது விஜய் டிவிக்கே பெரும் சோதனை காலம் வந்துள்ளது.
மக்களால் ரசிக்கப்பட்டு வரும் விஜய் டிவி கூடிய விரைவில் கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாறு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து, ஜியோ ஹாட்ஸ்டாராக தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
விஜய் டிவியை வாங்கிய கலர்ஸ்
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியின் லோகோவும் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். இது விஜய் டிவியை பார்த்து ரசிக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நல்ல லாபத்திற்கு விஜய் டிவி விற்கப்பட்டு இருப்பதாக கூற நிலையில், கலர்ஸ் நிறுவனம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறதாம். இதில், இதுவரை விஜய் டிவியில் நடந்து வந்த பழமையான நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்தப்போகிறார்களாம்.
அதற்கு பதிலாக புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகளை துவங்கப்போவதாக கூறுகின்றனர். மேலும், பிரியங்கா, கோபிநாத் போன்ற தொகுப்பாளர்களும் நீக்கப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.