ஷங்கர்
இந்திய அளவில் பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன், 2.0 என அவரது பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டவை.
இவர் இயக்கத்தில் கடைசியாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது, ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
புறநானூறு இல்லை.. SK25 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெறித்தனமான அப்டேட்
ஷங்கர் தற்போது தெலுங்கில் கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி உள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10ம் தேதி கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் குறித்தும் அவர் ஏன் நடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இந்த நடிகரா?
அதில், ” கேம் சேஞ்சர் படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் விஜய்யிடம் தான் சொன்னார். அவருக்கும் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதில் ஒரு கண்டிஷனும் ஷங்கர் வைத்திருந்தார்.
அதாவது, இப்படத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். விஜய் அரசியல் பணிகளை மனதில் வைத்து கொண்டு விலகிவிட்டாராம்.
அதனால், படத்தை ராம் சரணை வைத்து எடுத்து விட்டார்” என கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.