ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(wijeyadasa rajapakshe) போட்டியிடவுள்ளார்.
அதற்காக அவர் விரைவில் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது
சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இது தொடர்பான அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.’
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி
விஜயதாச ராஜபக்ச
தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்குறித்தவாறான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன் விஜயதாச ராஜபக்சவுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது.
நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம்.
அவர் இப்போது எம்மவர். அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை’ என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |