கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். அவருடைய மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜயகாந்தை தொடர்ந்து அவருடைய மகன் ஷண்முக பாண்டியன் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக கொம்புசீவி என்கிற படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், பிரபல தயாரிப்பாளருமானவர் டி.சிவா. இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்துக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருந்தது குறித்து பேசியுள்ளார்.
நடிகையுடன் நடக்கவிருந்த திருமணம்
விஜயகாந்துக்கு பெரிய தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் எல்லாம் தங்கள் பெண்ணை கட்டிக்கொடுக்க தயாராக இருந்தார்கள். அதுமட்டுமின்றி என்ன வேண்டுமானாலும் செய்வதாகவும் சொன்னார்கள். மேலும் ஒரு நடிகைக்கும் விஜயகாந்துக்கும் திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் அந்த திருமணத்தை வேண்டாம் என சொல்லிவிட்டார்.
தனது நண்பர் ராவுத்தர் சொன்னதை அடுத்து, ‘எனக்கு உன்னைவிட யாரும் நல்ல யோசிக்கமாட்டார்கள்’ என சொல்லிவிட்டு, அந்த திருமணத்தை வேண்டாம் என கூறினார்” என டி.சிவா பேசியுள்ளார். ஆனால், அந்த நடிகை யார் என்று டி.சிவா சொல்லவில்லை.

