நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாகியுள்ள மாபெரும் நட்சத்திரம் ஆவார். படத்திற்கு படம் தனது உடலை வருத்தி கொண்டு இவர் செய்யும் விஷயம் மிகவும் கடினமான ஒன்றாகும்.

இவர் நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை.

விக்ரமின் புதிய படம்
இந்த நிலையில், விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 96 மற்றும் மெய்யழகன் என தலைசிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில்தான் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

42 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, இதோ
ஆளே மாறிய விக்ரம்
அறிவிப்பில் விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உடல் எடையை குறைவு, தனது கெட்டப்பை மாற்றி ஆளே மாறியுள்ளார் விக்ரம். இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..




