ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அதன் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் இந்த படத்தில் ரஜினி உடன் கெஸ்ட் ரோலில் ஹிந்தி நடிகர் ஷாருக் கான் வர இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் பரவி வருகிறது.

விநாயகன்
ஜெயிலர் முதல் பாகத்தில் வில்லன் வர்மன் ரோலில் மலையாள நடிகர் விநாயகன் நடித்து இருந்தார். அவர் தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் தான் ஜெயிலர் 2ல் நடித்திருப்பதாக கூறி இருக்கிறார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் அவர் இறந்துவிட்டது போல காட்டப்பட்ட நிலையில் ஜெயிலர் 2ல் அவர் இறக்கவில்லை என்பது போல காட்டப்படுமா, அல்லது பிளாஷ்பேக் காட்சிகள் வருமா என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.


