விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மதகஜராஜா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.


அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்.. இயக்குநர் உடைத்த ரகசியம்
யார் தெரியுமா?
இந்நிலையில், அடுத்து விஷால் நடிக்கும் 35 – வது திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
ஈட்டி திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு கதையில் விஷால் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.வி.சவுத்ரி தயாரிக்கிறார்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இன்று நடைபெற்ற இந்த பூஜையில் நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது, இது தொடர்பான ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி உள்ளது.



