முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்… தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி (Volker Türk) விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான பச்சை சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதந்திருந்த வோல்கர் டேர்க் அரசாங்கம், எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம், பாதிக்கப்பட்டோர் எனப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், யாழ் விஜயத்தின்போது செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார்.

இந்நிலையில் வோல்கர் டேர்க்கின் செம்மணி விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட சிறீதரன், ”அவ்விஜயம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத்தலைப்பட்டிருக்கிறது என்பதையே காண்பிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணையனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது.

ஐ.நா ஆணையாளரின் செம்மணி விஜயம்... தமிழர்களுக்கு பச்சைக் கொடி : சிறீதரன் சுட்டிக்காட்டு | Volker Turk Chemmani Visit Green Signal For Tamils

இந்த விடயத்திலிருந்து, அரசாங்கம் மாறியிருப்பினும் இலங்கையில் ஆட்சிபீடமேறும் அரசாங்கங்களின் மேலாதிக்க சிந்தனை இப்போதும் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

ஆகவே உள்ளகப்பொறிமுறை ஊடாகவோ அல்லது கலப்புப்பொறிமுறை மூலமோ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியாது, சர்வதேசத்தின் பங்கேற்புடன்கூடிய சுயாதீன விசாரணைப்பொறிமுறை ஒன்றையே உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் முன்மொழியவேண்டும்” என தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.