ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை நான்கு மணி வரை இடம்பெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நடவடிக்கைகள்
நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.