கனடாவில்(Canada) விற்பனை செய்யப்படும் வெள்ளரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் ஒன்று விற்பனை செய்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.
வெள்ளரிக்காய் விற்பனை
குறிப்பாக இந்த வெள்ளரிக்காய் வகைகளில் சல்மோன்லா பற்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த வெள்ளரிக்காய் வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மற்றும் ஏனைய கனேடிய மாகாணங்களிலும் இந்த வெள்ளரிக்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் சன்பிட் என்ற நிறுவனத்தினால் இந்த வெள்ளரிக்காய் வகைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.