கனடாவில் (Canada) பரவும் தட்டம்மை நோய் நிலைமை குறித்து அமெரிக்காவில் (USA) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின், நியூயார்க் (NewYork) மாநில சுகாதாரத் துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தட்டம்மை மிகவும் பரவலான தொற்று நோயாக இருப்பதால், இது எல்லைகளை எளிதாக கடக்கிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை நோய்
இது தொடர்பில் ஒன்டாரியோவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் கியரன் மூர் தெரிவிக்கையில், “இந்த தொற்று தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகளில், குறிப்பாக ஒன்டாரியோவில், மற்றும் உலகின் பல பகுதிகளில் பரவி வருகிறது.
இந்நிலையில், ஒன்டாரியோ மாகாணத்தில் இந்த நோய்த்தொற்றில் தற்போது வரை 661 பேருக்கு தட்ட்மமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
தொற்றுப் பரவல்
கடந்த வாரம், 89 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய வாரத்தில் இது 100 ஆகவும், அதற்கு முந்தைய வாரத்தில் 120 ஆகவும் இருந்தது, எனவே எண்ணிக்கை மெதுவாக குறைவடைந்து வருகிறது.
இந்த தொற்றுப் பரவல் முக்கியமாக தெற்கு ஒன்டாரியோவில் உள்ள Southwestern Public Health Unit பகுதியில் தடுப்பூசி போட்டிராத குழந்தைகளால் ஏற்பட்டிருக்கலாம். இது வெயில்காலம் வரை நீடிக்கலாம்” என அவர் கூறியுள்ளார்.