முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை…! ஹவூதிக்கு நரகத்தை காட்டுவோம்

அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால் அதற்கான கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏமனில் இருந்து செயற்படும் ஹவூதிக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம் என்று ஹவூதிகள் சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து ஹவூதிக்கள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தக்க பதிலடி கொடுப்போம் 

சனா பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு ஹவூதிக்கள் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால், நரகத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...! ஹவூதிக்கு நரகத்தை காட்டுவோம் | Warning Iran Trump Orders Attack Against Houthis

இதேவேளை, யாரேனும் தங்களை அச்சுறுத்தினால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் (Iran) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து பதிலளிக்கையிலேயே ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஹவூதிக்கள் அறிவித்துள்ளனர்.  

ரஷ்ய – உக்ரைன் போர் முடிவு

அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நாளை (18) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை...! ஹவூதிக்கு நரகத்தை காட்டுவோம் | Warning Iran Trump Orders Attack Against Houthis

ரஷ்ய – உக்ரைன் போரை போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இருநாட்டு ஜனாதிபதிகளிடையேயும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை கடந்த வாரம் சவுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன் – ரஷ்ய போரை நிறுத்துவதற்கு 30 நாட்களுக்கான போர்நிறுத்தத் திட்டத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் ரஷ்யாவின் ஆதரவைப் பெறவும் ட்ரம்ப் முயற்சித்து வருகின்றார்.

இந்நிலையிலேயே இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கிடையேயுமான சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.