ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) எதிர்வரும் (23) மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
துபாய், சார்ஜா, அஜ்மானில் உள்ள பல்வேறு சாலைகள் மழைவெள்ளத்தில் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வானிலை அறிக்கையின் படி இன்று (20) லேசான பனிமூட்டத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
அடுத்த வார தொடக்கத்தில் (22) நாடு முழுவதும் பரவலாக லேசான மழை காணப்படும். அதற்கு அடுத்த நாள்(23) அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த கனமழைக்கு பிறகு வெப்பநிலை கணிசமாக உயரக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |