முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் மாற்றம்

 அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளது.

நீண்ட காலமாக மாகாணசபை முறைமையை அனுரகுமார தரப்பினர் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்பொழுது மாகாணசபை முறைக்கு இணங்குவதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு நடத்திய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் மாற்றம் | We Agreed For Pc System Says Npp

மாகாண சபை அதிகாரம்

மாகாணசபைகள் என்பது அதிகாரத்தை பகிர்வதாகும் எனவும் அதனால் இந்த முறைமைக்கு இணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மாகாணசபைகளின் ஊடாக அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபை முறைமை தற்பொழுது இயங்குவது போன்று இயங்க வேண்டுமெனவும், மாகாண சபை முறைமை இதற்கு அப்பால் செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் மாற்றம் | We Agreed For Pc System Says Npp

அரசியல் சாசன ரீதியில் மாற்றம்

அரசியல் சாசன ரீதியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், அரசியல் அமைப்பின் பல விடயங்கள் நடைமுறையில் இல்லை எனவும், அரசியல் சாசன ரீதியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், அரசியல் அமைப்பின் பல விடயங்கள் நடைமுறையில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கு அப்பலான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும், இதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஸ்தாபிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் மாகாணசபை முறைமைக்கு எதிராக அனுரகுமார தரப்பினர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்