ராஜபக்ஸக்களை நிச்சயம் சிறையில் அடைப்போம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸக்கள், ரணில் விக்ரமசிங்க போன்றோரை சிறையில் அடைப்போம் என்பதனை தெளிவாக கூறுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனி வரி மோசடியின் போது தாமே அந்த முறைப்பாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை கைவிட மாட்டோம் எனவும் வழக்கை முன்னெடுத்துச்செல்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைப்பூண்டு மோசடி, சதொச நிறுவனம் அரிசி இறக்குமதி செய்து அதில் பூச்சிகள் காணப்படுவதாகக் கூறி பியர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பசு மாடுகள் இறக்குமதியின் டொலர் கணக்கில் மோசடி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத திணைக்களத்தின் அரச ஊழியர்கள் முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வீட்டில் பணியாற்றினர் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிணை முறி மோசடி வழக்கு முன்னெடுத்துச்செல்லப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ராஜபக்சங்கள், ரணில் போன்றவர்கள் கைது செய்யப்படுவார்கள் நீதி அமைச்சர் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

