வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும் அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கலாசார சமூகமாக மாற்ற
நேற்று பிற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.
ருஹுணு கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெராவை பார்வையிட்ட ஜனாதிபதி, ஹஸ்திராஜா யானை மீது புனித கலசத்தை வைத்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு நாட்டை அதன் வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்டையில் மாத்திரமே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நமது சமூகத்தை ஒரு கலாசார சமூகமாக மாற்ற புத்த மதம் உதவியது என்றும், பௌதீக வளங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கும் சமூகத்தில், மறைந்து வரும் சமூக மதிப்புகள் மற்றும் பண்புகள் மீண்டும் மீட்சிபெற, இவ்வாறான கலாசார நிகழ்வுகள் வாயப்பளிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

