அதிகாரத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டினதும் உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆட்சி அதிகாரங்களை மிகுந்த அர்ப்பணிப்புக்களை செய்து பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரத்தை இலகுவில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் நலன்
கெஸ்பேவ நகரசபையின் நகரபிதா பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது கெஸ்பாவ நகரசபையின் அதிகாரபூர்வ ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி நியமிக்கப்பட்டது முதல் அதிகாரபூர்வமற்ற வகையில் பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே நாட்டினதும் உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆட்சி அதிகாரத்தை அர்ப்பணிப்புடன் பெற்றுக்கொண்டதாக லக்ஸ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.