தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை என தாம் கூறவில்லை எனவும்,தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ய நேரிடும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath)தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற அனர்த்தங்களின் போது உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விஜித ஹேரத் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தனித்தனி உலங்குவானூர்தி பயன்பாடு
கடந்த அரசாங்கங்களில் ஜனாதிபதி, ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகள் தனித்தனி உலங்குவானூர்திகளை பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அரசாங்கத்தில் எவரும் இவ்வாறு உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியது கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.