வர வர வெள்ளித்திரைக்கான மவுசு குறைந்துவிடும் போல் தெரிகிறது.
காரணம் அந்த அளவிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சீரியல்களும் மக்களை சின்னத்திரை பக்கம் அதிகம் கொண்டு வருகிறது.
வாரா வாரம் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ தொலைக்காட்சியில் கலக்கி வரும் சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகிவிடுகிறது.
முக்கோண காதல் கதைக்களத்தை வைத்து கடந்த சில வாரங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே முதல் இடத்தை பிடித்துள்ளது.
புதியதாக திருமணம் நடந்து நெருக்கமாகி வரும் சூர்யா-நந்தினியின் மூன்று முடிச்சு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கயல் வழக்கம் போல் பரபரப்பின் உச்சமாக ஒரு பிரச்சனை முடிவடைய இன்னொரு பிரச்சனை என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிய இந்த தொடர் மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஹனிமூன் செல்ல நினைத்து பிரச்சனையில் சிக்கி ஊருக்கு வந்த ஜோடிக்கு அடுத்த பிரச்சனை தொடங்குகிறது, இந்த மருமகள் தொடர் 4வது இடத்தை பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை, மனோஜ், கதிரை பிடிக்க சென்று விபத்தில் சிக்கிய கதைக்களத்துடன் ஒளிபரப்பான இந்த தொடர் 5வது இடத்தில் உள்ளது.
டாப் 5ல் இந்த சீரியல்கள் இடம் பிடிக்க 6ல் இருந்து 10 வரை இடம் பிடித்துள்ள தொடர்களை பற்றி பார்ப்போம். டாப் 10ற்கு மேல் இடம் பிடித்த வந்த ஜீ தமிழ் தொடர் இப்போது 10ல்குள் வந்துள்ளது.
- எதிர்நீச்சல் 2
- அன்னம்
- பாக்கியலட்சுமி
- கார்த்திகை தீபம்
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2