முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறாவிட்டால்!

இலங்கையில் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (மே 6) நாடு தழுவிய அடிப்படையில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நோக்கில் தேர்தல் நடைபெற்றது.
கழிவு அகற்றுதல்,, பூங்காக்கள் பராமரித்தல், உள்ளூர் வீதிகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நகரின் அடிப்படை சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக இந்த உள்ளுராட்சி மன்றங்கள் திகழ்கின்றன.

இத்தேர்தல், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசாரமுறை (Mixed Member Proportional – MMP) அடிப்படையில் நடைபெற்றது.

எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறாவிட்டால்! | What Happens If No Party Wins A Majority

எவ்வாறு வாக்களிப்பு நடந்தது?

இந்த முறைப்படி, மக்கள் தங்களது உள்ளூர் வட்டாரத்தில் போட்டியிடும் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுவை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஒருமை வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்

ஒருமை வட்டார மட்டத்திலான வட்டாரத்தின் சகல வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி அல்லது குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் குறித்த வட்டாரத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்

பன்மை வட்டாரமொன்றில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் இருவர் அல்லது மூவர் அவ்வட்டாரத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உள்ளுர் அதிகார சபை ஒன்றின் நிருவாகப் பிரதேசத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சகல அரசியற் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் மொத்தக் கூட்டுத்தொகையை குறித்த உள்ளுர் அதிகார சபைக்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர் எண்ணிக்கையால் பிரிக்கப்பட்டு வரும் சராசரி அளவின் அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றது.

மேலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலும் இந்த ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பின்வரும் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

• வட்டார மட்டத்தில் – 60%

• விகிதாசார அடிப்படையில் – 40%

இந்த முறை 2018 தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. இது நேரடி வட்டார பிரதிநிதித்துவத்தையும், விகிதாசார இடவழங்கலையும் இணைத்து, வாக்கு எண்ணிக்கையை சிக்கலானதாக மாற்றுகிறது.

எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என்றால் என்ன நடக்கும்?

ஒரு உள்ளுராட்சி மன்றத்தை நிர்வாகம் செய்வதற்கு, மொத்த இடங்களில் 50% இற்கு மேற்பட்ட இடங்களைப் பெற வேண்டும்.

பெரும்பான்மை பெறவில்லை என்றால், முதன்மை கட்சி தனியாக ஆட்சி நடத்த முடியாது.

இந்த சூழ்நிலையில்:

• அந்த கட்சி மற்ற கட்சிகள் அல்லது சுயேட்சை உறுப்பினர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

• கூட்டணியைக் கட்டமைக்க முடியாதபட்சத்தில், மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கலாம்— கூடுதல் ஆசனங்கள் வென்றெடுக்காத சந்தர்ப்பத்திலும்
இதுபோன்ற சூழ்நிலை, வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கிடையே பிரிந்துள்ள இடங்களில் பொதுவாக ஏற்படுகிறது.

தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கின்றனர்?

• ஒரு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றால், அந்த கட்சியின் தலைவர் முதல்வர் அல்லது நகரபிதாவாக நியமிக்கலாம்.

• பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில், முதல் சபை கூட்டத்தில் வாக்களிப்பின் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தங்கல்லை நகரசபையில், NPP (தேசிய மக்கள் சக்தி) 9 இடங்களைப் பெற்றது.
மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சேர்த்து 11 இடங்களைப் பெற்றுள்ளனர்.

இங்கே, தேசிய மக்கள் சக்தி கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால், அவர்கள் மற்ற கட்சி அல்லது சுயேட்சையுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தி சில தொகுதிகளில் வெற்றியீட்யிருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.