கூகுள் சூப்பர் கணனியைவிட, சிறப்பாகச் செயல்படும் சிறப்புக் கணனியை சீனா (China) உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா அறிமுகம் செய்துள்ள “ஜுச்சோங்ஷி – 3” என்ற குவாண்டம் கணனி, சூப்பர் கணனிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாக கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்டிசி) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி “ஜுச்சோங்ஷி – 3” என்ற குவாண்டம் கணனியைக் கண்டுபிடுத்துள்ளனர்.
சூப்பர் கணனி
வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் “ஜுச்சோங்ஷி – 3” கணணி, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணனியைவிட பத்தாயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணனியைவிட பத்து லட்சம் மடங்கு வேகமாக இயங்கக்கூடியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000 ஆண்டுகளில் செய்யும் பணிகளை 200 நொடிகளில் செய்து சாதனை படைத்தது.
ஆராய்ச்சியாளர்கள்
இந்தநிலையில், தற்போது அந்த பணியை சீனாவின் “ஜுச்சோங்ஷி – 3” கணணி, வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என சீனாவை சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணனியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.