முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக செயற்பட்ட தப்பியுள்ள சிலர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழரசு கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய
செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் கோரி எழுதிய கடிதங்கள்

மேலும் தெரிவிக்கையில், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்கள்
சம்மந்தமாக கட்சியின் உடைய தீர்மானங்களை மீறி செயற்பட்டவர்கள் அனைவருக்கும்
எதிராக விளக்கம் கோரி கடிதம் அனுப்பபட்டுள்ளன.

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை | Who Act Against Party Will Be Expelled From Party

நேரடியாக எங்கள் கட்சிக்கு
எதிராக போட்டியிட்டவர்கள் ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சிலர் எங்கள் கவனக்குறைவால்
தப்பியுள்ளனர்.

அவர்களுடைய பெயர்களும் சொல்லப்பட்டுள்ளது. அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். விளக்கம் கோரி எழுதிய கடிதங்களுக்கு சிலர் பதில் எழுதாமல் இருக்கின்றனர். சிலர் பதில் எழுதி இருக்கின்றனர்.

ஆகவே பதில் எழுதாதவர்கள் அவர்களுக்கு
கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும்
அதை அவர்களுக்கு அறிவிக்கின்றோம். அதற்கு மேலதிகமாக விளக்கம்
எழுதப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்போம்.

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை

அதேவேளை விளக்கம் எழுதியவர்கள் தொடர்பாக அவர்களது விளக்கத்தை ஆராய்ந்து
அவர்களை கட்சியின் ஒழுக்காற்று முறைமைக்குள்ளே அவர்கள் குற்றம் செய்தவர்களாக
இருந்தால் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒழுக்ககாற்று நடவடிக்கை மூலமாக அவர்களை
கண்காணிப்பது அல்லது ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதாக இருந்தால் கொடுப்பது என்ற
கருத்துக்கள் நிலவி இருக்கின்றன.

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை | Who Act Against Party Will Be Expelled From Party

அது தொடர்பாக ஒவ்வொரு விடயங்களை எடுத்து
வெளிப்படுத்துவோம்.

ஆகவே கட்சியின் கட்டுப்பாடு சம்மந்தமாக மிக தெளிவான அனைவரும்
புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே கட்சி தீர்மானத்துக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கின்றவர்களுக்கு எதிராக கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என
தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.