எங்களுடைய மண்ணுக்கு நிகழ்ந்த துன்பங்கள், போரின் அவலங்களை யார் எழுதப் போகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) கேள்வியெழுப்பியுள்ளார்.
புலம்பெயர் எழுத்தாளர் வல்லிபுரம் சுகந்தனின் இரு நூல்கள் கிளிநொச்சியில் நேற்று (27) வெளியீட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இங்குள்ள தமிழர்களுக்கு இன்னல் விழைத்தால் சங்காரம் நிஷம் என சங்கே முழங்கு என்ற பாரதியாரின் கவிவரிக்கமைய சங்கு ஒரு காலத்தின் பதிவு.
எமது சமூகத்திலே எழுத்தாளர்கள் இலைமறை காய்களாக இருக்கின்றார்கள்.
இந்நிலையில், போரின் வலிகளை கண்ணுக்கு முன்னால் பார்த்தவர்கள், அதன் வலி சுமந்தவர்கள், இதை அறிந்தவர்கள் இதைப்பற்றி எழுதுங்கள்.
எழுதுவதுதான் வாழ்க்கையினுடைய ஒரு அடையாளமாக இருக்கும்.
அடுத்த சந்ததிக்கு வரலாற்றை கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,,