முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம்

கன்சர்வேட்டிவ் கட்சித்(Conservative Party) தலைமைக்கு இந்திய வம்சாவளியினர் ஒருவர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா தேர்தலில் தோல்வியடைந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிஷி சுனக்(Rishi Sunak) தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியுள்ளது.

இந்நிலையிலேயே, கட்சித் தலைமைக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியினர்
பிரித்தானியாவின்(UK) முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்,(Priti Patel) என பிரித்தானியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர்

மேலும், பிரீத்தியை கட்சித் தலைமைக்கு போட்டியிடுமாறு கன்சர்வேட்டிவ் கட்சி தரப்பிலிருந்தும், சக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வற்புறுத்தியதாகவும், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரச்சார அலுவலர்கள் பலருடைய ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் பிரீத்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம் | Who Is The Next Conservative Party Leader

இதேவேளை, அவர் உள்துறைச் செயலராக இருக்கும்போது, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், சக அரசு ஊழியர்களை மரியாதைக் குறைவாக நடத்துதல், அவர்களைப் பார்த்து சத்தமிடுதல், வம்புக்கிழுத்தல் என பல குற்றச்சாட்டுகளும் பிரீத்தி மீது உள்ளன.

எழுந்துள்ள விமர்சனம்

மேலும், 2020ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் ஆலோசகரான Sir Alex Allan, பிரீத்தி சக ஊழியர்களிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதன் மூலம், அமைச்சருக்கான ஒழுக்க நெறிகளை மீறியதாக குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவரும் இந்திய வம்சாவளியினரா! எழுந்துள்ள விமர்சனம் | Who Is The Next Conservative Party Leader

எனினும், ஜான்சன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, Sir Alex Allan தன் பதவியிலிருந்து விலகினார்.

எனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களையுடைய பிரீத்தி பட்டேல் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவரா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.